
1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு.
2. திருமணவீட்டில்
சரசரக்கும் பட்டுப்புடவைகளால்
பேசுகிறார்கள் பெண்கள்.
3.தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
11 comments:
/1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு./
அழகான வரிகள்
யதார்த்தமான வரிகள்...
அருமையான கவிதைகள்..
Sen22,
Bangalore
//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்//
கொலுசும்,தாவணியும் இப்படியுமா அந்நியப் படுத்தும்??
அன்புடன் அருணா
//கொலுசும்,தாவணியும் இப்படியுமா அந்நியப் படுத்தும்??//
அருணா,
இந்தக் கவிதையின் பொருள் உங்களுக்கு புரியவில்லையெனில் சொல்லுங்கள் விளக்குகிறேன்.
நன்றி திகழ்மிளிர்,சென்.
//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.//
ஒரு பெண் பருவமடையும் போது அந்நியப்படும் உறவுகளையும், உணர்வுகளையும் சொன்ன விதம் அருமை.
//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்//
நன்றாக இருக்கிறது கவிதை.
அச்சச்சோ நல்லாவே புரியுது......அது ஒரு வருத்ததுலே கேட்டது....
அன்புடன் அருணா
நன்றி சேவியர்,அருணா,சகாரா
//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்//
Best kavidhai uncle,,,, 3cheers :)
நன்று நிலா :)
//தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.//
சரியா சொன்னீங்க....
Post a Comment