வளர்த்துவந்த பிரியங்களை
வீதியில் வீசிவிட்டு
முகமில்லாமல்
திரும்பிச் செல்கிறாய்...
புள்ளியென மறைந்துவிட்ட
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.
பிரிந்திருந்த பொழுதுகளைவிட
பிரிகின்ற பொழுதின்
கனம் அதிகமானதாகவே இருக்கிறது
எப்போதும்.
பிரிகின்ற பொழுதின்
கனம் அதிகமானதாகவே இருக்கிறது
எப்போதும்.
பொட்டிழந்த உன் நெற்றிக்கென
நான் கொணர்ந்த குங்குமம்
அந்தி மழையில் கரைய,
வீடு நோக்கி நடக்கின்றன
உணர்வற்ற என் கால்கள்.
நான் கொணர்ந்த குங்குமம்
அந்தி மழையில் கரைய,
வீடு நோக்கி நடக்கின்றன
உணர்வற்ற என் கால்கள்.
7 comments:
பொட்டிழந்த உன் நெற்றிக்கென
நான் கொணர்ந்த குங்குமம்
அந்தி மழையில் கரைய,
வீடு நோக்கி நடக்கின்றன
உணர்வற்ற என் கால்கள்.
Touching Lines....
Chella.
புள்ளியென மறைந்துவிட்ட
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.
என்னே ஒரு வரிகள்.. மனதை கீறிவிட்டது..
அருமையான வரிகள்..
அழகான கவிதை...
Senthil,
Bangalore
வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றிகள்.
//புள்ளியென மறைந்துவிட்ட
பின்னரும் உன் கையசைப்புக்காக
காத்திருக்கிறது
பழக்கப்பட்ட இதயம்.//
பழக்கமான விஷயம்தான் என்றாலும் எழுதிப் படிக்கும் போது புது அழகுடன் இருக்கிறது
அன்புடன் அருணா
very nice
i like this very much
Post a Comment