Monday, November 02, 2009

யட்சி



வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது.
காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.
நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.

17 comments:

said...

அருமையாய் இருக்கு கவிதை நிலா ரசிகன்!

நிலவின் மகள் said...

//காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.//
Kaatrum Oasai yezhuppum pinpozhuthugalai
Kaatrin Oasai maraniththa pinpozhuthugal yena varainthiruppathu azhagu.

//நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.//
superb lines NilaRaseegan..

said...

//வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி// - நல்ல கற்பனை. நல்ல சொற்க்கலவை. நல்ல கவிதை நண்பரே.

said...

Nice Lines.. Boss
It's like
Naan oruvan maattilum-ingulathor
Naragaththuzhaluvatho....
Guess?

said...

//பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.//

சொற்க‌ளின் தேர்வும் க‌விதையும் ந‌ல்லா இருக்கு.

said...

கச்சிதம்!

ரொம்ப நல்லா இருக்குங்க...

மீண்டும் வாசிக்கத் தோன்றுகிறது

said...

nice..!

said...

அன்பு நிலாரசிகன் அவர்களுக்கு,

சொற்களின் விரயம் இல்லாமல் அடர்த்தியாய், அழகாய் இருக்கிறது கவிதை! நினைத்தவுடன் உருமாறி பறவையாகும் மனதின் சிறகடிப்புச் சத்தத்தில் உயிர்த்தெழுகிறாள் எனக்குள் வசிக்கும் யட்சி! செரிவாய் இருக்கிறது வரிகள்!

என்னுடைய பதிவுலகைப் படித்து உங்கள் கருத்துக்களை சொன்னால் என்னை புடம் போட ஏதுவாய் இருக்கும். வருகை தரவும்.

அன்புடன்
ராகவன்

said...

//வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது//
முரண் தொடை வரிகள் அழகு.

said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பா.ரா :)

said...

நன்றி சிவன்,நிலவின்மகள்,ராஜன்,ரசிகை,அடலேறு,சிவாஜி,உயிரோடை.

said...

நிச்சயம் வாசிக்கிறேன் ராகவன்.:)

said...

நல்லா இருக்கு நிலா.

சந்தோசமாய் ஒரு கவிதை
போடுங்களேன்.

said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !

said...

நன்றி சங்கர்.

நன்றி செல்வராஜ்...சந்தோஷ கவிதை எழுதும் மனநிலை இப்போதில்லை :(

niranjana said...

migavum arumai.......

said...

ஆஹா ... மீண்டும் ஒரு மௌனப்பெருவெளி ஆனால் இது பள்ளத்தாக்கு