Friday, November 06, 2009

சச்சின் எனும் மாவீரன்!!




ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அவர்கள் அவுட் ஆக்க நினைப்பது
லட்சுமணனை. இந்தியாவை ஒருநாள் போட்டிகளில் தோற்கடிக்க நினைத்தால் முதலில் எடுக்க விரும்பும் விக்கெட் சந்தேகமில்லாமல்
சச்சினைத்தான். இன்று நடந்த போட்டியையும் சேர்த்தால் இதுவரை ஒன்பது சதங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருக்கிறார்.

முதல் பேட் செய்த ஆஸி.வீரர்கள் 350 ரன்களை குவித்தபோது கடைசி பந்தில் அவுட்டானார் கேமரூன் ஒயிட். அந்த பந்து தஞ்சமடைந்தது சச்சினின் கைகளில். பிடித்தவுடன் கோபத்தில் பந்தை தரையில் அவர் எறிந்தபோதே அவரது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் இன்றொரு ருத்ரதாண்டவம் இருக்கிறதென்று!! ஏனெனில் சச்சின் கோபப்படுவது மிக அபூர்வம்.

ஷார்ஜாவில் பதினோரு வருடங்களுக்கு(1998) முன்பு சச்சின் அடித்த அடியை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது.காரணம், அவர் அடித்த இரண்டு சதங்களால்தான் இந்தியாவுக்கு அந்த கோப்பை கிடைத்தது என்பதை காட்டிலும் அந்த இரு சதங்களை எப்படி அவர் அடித்தார் என்பதே ஆகும். காஸ்பரோவிச் என்னும் ஆஸி பவுலரை அவர் அடித்த அடியில் சில வருடம் அவரை ஆஸி அணியிலேயே காணமுடியவில்லை. எதிர்முனையிலிருந்து லட்சுமணன் இரண்டாவது ரன் எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு ரன்னோடு நின்றுவிட்டார். புயலனெ விளையாடிக்கொண்டிருந்த சச்சின் வேகமாக சென்று லட்சுமணனிடம் இப்படி சொன்னார் "ஓட முடியாவிட்டால் ஏன் கிரிக்கெட் விளையாட வந்தாய்?" காரணம் அது இறுதிபோட்டி.

பைனலில் ஆஸி இந்தியாவிடம் தோற்ற போது ஸ்டீவ் வாக் சொன்னார் "It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don."


தனது சட்டையை கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஷேன் வார்ன் புலம்பி்யது இப்படி:

"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"


2004ல் சச்சின் சற்று சறுக்கியபோது
Times of India பத்திரிகை அவரது கார்டூனை முதல் பக்கத்தில் வெளியிட்டு "END-DULKAR?" என்று ஏளனம் செய்தது. அப்போதும் சச்சின் அமைதியாகவே இருந்தார். அதன்பிறகான ஒரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 140 ரன்கள் சச்சினுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது என்பதை உணர்த்தி பத்திரிகைகளை வாயடைக்க செய்தது.

விழுகின்ற போதெல்லாம் விழுந்துவிட்டோம் என்று கலங்கி ஒதுங்கி விடும் கிரிக்கெட் உலகில் விழுவதே எழுவதற்காகத்தான் என்பதை சச்சின் நிரூபித்துக்கொண்டே இருப்பார்.

இந்த முறை ஆஸிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சற்று தடுமாறிவுடன் வழக்கம்போல் பத்திரிகைகள் சச்சின் தேவையா என்று எழுத ஆரம்பித்தன. மூன்றாவது போட்டியில் எதிர்பாராத ரன் அவுட்(பவுலர் மறைத்துக்கொண்டதால்) என்றபோது அவர் அடித்த 32 ரன்கள் அடுத்த போட்டிக்கான விதையாகவே எல்லோர் மனதிலும் விழுந்தது. நான்காவது ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் எடுத்த நிலையில் "பக்னர்" ஞாபகத்தில் நின்ற நடுவரால் தவறுதலாக எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டபோது சச்சினுக்காக பரிதாப பட மட்டுமே முடிந்தது.

ஆனால் இன்று?

19 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்,141 பந்தில் 175 ரன்கள்! ஆஸி அணி கடைசில் ஜெயித்தாலும் மனதளவில் வெற்றி இந்தியாவுக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லை. எங்கள் தேசத்தின் இணையற்ற விளையாட்டு வீரனின் மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸி ரசிகர்கள்கூட கொண்டாடி இருப்பார்கள்!
36 வயதில், சேசிங் செய்யும்போது 175 ரன்கள் என்பதெல்லாம் எல்லா விளையாட்டு வீரனாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. Good க்கும் Greatக்குமான வித்தியாசத்தை இங்கே நாம் அறிந்துகொள்ளலாம்.

சென்னையில் 1999ல் பாக் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகுந்த முதுகு வலியுடன் சச்சின் இந்தியாவை வெற்றியை நோக்கி இழுத்துச்சென்றார். எதிர்பாராதவிதமாக 15க்கும் குறைவான ரன்கள் தேவைபடும்போது சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கே உரித்தான "வாக் ஷோ" நடந்தேறியது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியை தழுவியது. ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்த தோல்வியை தாங்க முடியாத சச்சின் கதறி அழுததாக உடனிருந்தவர்கள் பின்னாட்களில் வருத்தத்தோடு சொன்னார்கள்.இன்றும் அது நடந்திருக்கலாம். ஒரு மகாவீரனின் கண்ணீர்துளிகள் அவனை அறியாமலேயே பல வித்துக்களை உருவாக்குகிறது.அவரது கண்ணீரின் வலிமை இனி வரும் இரு போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் என்பதை வெகு நிச்சயமாக நமக்கு உணர்த்துகிறது.

சச்சினின் விளையாட்டை பார்த்தே கிரிக்கெட் மீது ஆர்வமாகி விளையாட வந்த கிரிக்கெட் வீரர்கள் பலர். சேவாக்,யுவராஜ்,தோனி போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்களுக்கு சச்சின் தான் காட்பாதர்.

சச்சினின் விளையாட்டை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்கள் பலகோடி மக்கள். 90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு மறுநாள் செய்திதாளில் இந்தியா தோற்றதை அறிந்துகொள்ளலாம்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அவருக்கு அடுத்ததாக களமிறங்கவேண்டிய அசாரூதின் பெஞ்சில் அமர்ந்து உறங்கி கொண்டிருப்பார்.எப்படியும் சச்சின் உடனே அவுட் ஆகபோவதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

1999ல் பாக்கிஸ்தானிடம் தோற்ற ரணத்தை அதற்கு பழிதீர்க்கும் விதமாக 2003 உலககோப்பையில் தீர்த்துக்கொண்டார் சச்சின். அவர் அடித்த அடியில் தன்னை இனி பந்துவீச அழைக்க வேண்டாம் என்று வாக்கார் யூனிஸிடம் கெஞ்சினார் சோயிப் அக்தர்!! எத்தனையோ சதங்களை சச்சின் விளாசி இருந்தாலும் அந்த போட்டியில் அடித்த 97 ரன்கள் One of the best innings for the Little Master!!

இன்றைய சச்சினின் ருத்ரதாண்டவத்தை ஆஸியின் புதிய வீரர்கள் இதற்கு முன் பாத்திருக்கவில்லை(பாண்டிங்கை தவிர) மயிரிழையில் ஜெயித்தபோதும் இனி வரும் போட்டிகளில் இந்த மாவீரனை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்போது அவர்களது கவலையாக இருக்கும்.

வெகு நாட்கள் கழித்து "பழைய" சச்சினை பார்த்த ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு மிஞ்சி இருக்கும் இருபோட்டிகளை இந்தியா வெல்ல சச்சின் காரணமாக இருக்கவேண்டும் என்பதுதான்.

சச்சினின் உடலில் காயம் இல்லாத இடமே இல்லை எனலாம். டென்னிஸ் எல்போ,முதுகுவலி இப்படி நிறைய. ஆனாலும் தொடர்ந்து சச்சின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரே ஒரு காரணம் அது 2011 உலககோப்பையை இந்தியாவுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கிற வெறி.

2003 உலககோப்பையை வெல்ல இந்திய அணியினர் 100% போராடியபோதும் சச்சின் மட்டும் 200% போராடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கறுப்பு தினத்தில் ஆஸியிடம் பைனலில் தோற்றபோது சச்சினை தொடரின் ஆட்டநாயகன் விருதை வாங்க அழைத்தார்கள். அப்போது மேடையேறிய சச்சினின் கவலைதோய்ந்த முகத்தை இன்றுவரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த Agony மாறும் 2011ல்.

ஒரு மிகச்சிறந்த சச்சின் - வாசகத்தோடு இதை நிறைவுசெய்கிறேன்.

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."


-நிலாரசிகன்.

51 comments:

said...

இன்னொரு சச்சின் வாசகம்;
உலகத்தில் இரண்டு வகையான துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகை சச்சின் டெண்டூல்கர். மற்றவகை மிகுதி எல்லாரும்.

சொன்னது அண்டி ஃபிளவர்.

said...

Avar oru legend enbathu sariye...

said...

சச்சினின் ரசிகனாய் நேற்று அவர் ஆட்டத்தை பார்த்த பொழுது , வருஷ சச்சினை காண முடிந்தது, சச்சினின் பல ருத்ரதாண்டவங்களில் இது சிறந்த ஒன்று, உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராய் அவர் ஆடிய ஆட்டத்தை விட இது பல மடங்கு சிறந்த ஒன்று.... இப்படி ஒரு சிறந்த வீரனை கிரிக்கெட்டில் இனி காண இயலாது.... வீழும் போதெல்லாம் அதை விட பல மடங்கு உயர்ந்து எழும் தன்னம்பிக்கை சிகரம் அவர்... இவருக்ககவாது இந்திய வீரர்கள் ஒருங்க்தினைது விளையாடி உலக கோப்பையை பெற்று தர வேண்டும்.... செய்வார்களா?

said...

சச்சினின் ரசிகனாய் நேற்று அவர் ஆட்டத்தை பார்த்த பொழுது ,96-2000வருஷ சச்சினை காண முடிந்தது, சச்சினின் பல ருத்ரதாண்டவங்களில் இது சிறந்த ஒன்று, உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராய் அவர் ஆடிய ஆட்டத்தை விட இது பல மடங்கு சிறந்த ஒன்று.... இப்படி ஒரு சிறந்த வீரனை கிரிக்கெட்டில் இனி காண இயலாது.... வீழும் போதெல்லாம் அதை விட பல மடங்கு உயர்ந்து எழும் தன்னம்பிக்கை சிகரம் அவர்... இவருக்ககவாது இந்திய வீரர்கள் ஒருங்க்தினைது விளையாடி உலக கோப்பையை பெற்று தர வேண்டும்.... செய்வார்களா?

said...

மெய்சிலிரிக்க வைத்தது நேற்றைய சச்சினின் ருத்ர தாண்டவமும் உங்கள் பதிவும் !!!


Proud to be hardcore fans of sachin !!

said...

உங்கள் பதிவை வாசிக்கும் பொய்த்து இனம் புரியாத ஒரு பெருமை ஒரு கர்வம். மொழி,நாடு கடந்தது சச்சின் என்னும் பெயரின் புகழ். நிச்சயமாக சச்சினை குறை கூறுபவர்கள் முட்டாள்கள்.

said...

கிர்க்கெட் பார்க்க துவங்கிய காலம் முதலே சச்சினை எனக்கு அவ்வளவாக பிடித்திருந்ததில்லை,

தோல்வி உறுதியென்று ஹாயாக படுத்துக் கொண்டு நமது இன்னிங்க்சை நேற்று பார்க்கத் தொடங்கிய எனக்கு என்னளவில் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்க்சை நிகழ்த்திக் காட்டினார்... ஆதர்ச வீரனுக்கான வெற்றுப் புகழாரம் இல்லை... நிஜமாகவே சச்சின் ' தி மாஸ்டர் '.... ஹாரிட்ஸ் சில நாட்களுக்கு நெற்றிக்கு நீறு இட்டுக் கொண்டு படுக்கைக்கு செல்வார் என்பது மட்டும் நிஜம் ....

said...

என்ன சொல்லறது உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு பேச்சே வரவில்லை, excellent

said...

மாவீரனுக்கு ஒரு உன்னதமான பாராட்டு..

said...

அருமையான கட்டுரை நிலா.

//90களில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்டு //
உண்மைதான்.

said...

நேற்று நடந்த மேட்சில் இந்தியா தோற்றது கூட வருத்தமாக இல்லை
சச்சினின் விஸ்வருபம் கண்டு மிக சிறந்த இன்னிங்க்ஸ்

said...

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."

That's true. I thought he will make 200, praying to god..but he will remain the cricket for years to come.

said...

its true

said...

Its really proud that an Indian is having the Outstanding and stunning performance and records and Emotions for India. And no one will be there to beat or equalize his record ever.

Heads Off Sachin...............!

said...

Last line was top class. Great article about the great man.

said...

நல்ல ஆக்கம் நிலா ரசிகன். நீங்கள் இவ்வளவு சச்சின் ரசிகரா? நான் இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை. ஆனால், தெரிந்துகொள்வதுண்டு. சச்சின் ஆட்டம் மட்டும் எப்பொழுதேனும் பார்ப்பதுண்டு. Such a great player and such a great man ;)

-ப்ரியமுடன்
சேரல்

said...

words will fail to express the master's class and performance.Amazing Sachin

said...

வாசித்து வாழ்த்தியவர்களுக்கு நன்றிகள்.

சேரல்,
//நல்ல ஆக்கம் நிலா ரசிகன். நீங்கள் இவ்வளவு சச்சின் ரசிகரா?//

சச்சினை பற்றி எழுத 400 பக்கம் அளவிற்கு என்னிடம் செய்திகள் இருக்கிறது சேரல்.:)

கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறிப்போன விளையாட்டு.சச்சின் என் இதயத்தின் நான்கு அறைகளிலும் வசிக்கும் மஹாவீரன்!

said...

"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."

its true

if cricket is religion, sachin is god

Azhagan said...

A very nice article!. Congrats to you. Sachin has never opened his mouth for all the media criticisms about his game, He has always given his response in the next game. It is sad that sachin is such a target for the media. We always expect too much from him, we often forget he too is human. No second thoughts about him being a great palyer. HE IS THE BEST.

said...

நேற்று சச்சின் 200 அடிப்பார்னு எதிர்பார்த்தேன்!

ஜடேஜா கொஞ்சம் விட்டு கொடுத்து விளையாடிருக்கலாம், ஆனாலும் சச்சின் சொந்த சாதனைக்காக ஆடுவதில்லையே!

said...

Wonderful article nila. I hope you would find time to write those 400 pages in your blog itself. Someone playing cricket for 20 + years in india is itself a great achievement. It would be a wonderful tribute to sachin if india wins a test series in australia and also the WC 2011 when he is still playing.

கலைவாணி said...

மிக சிறந்த சச்சின் பற்றிய மிக சிறந்த பதிவு..

said...

yenakku cricket antha alavukku paritchchayam illaiyentraalum..,
oralavu theriyum.

netraya aattatththil india-vin tholvi-yai vida sachin aattame manathil pramaandamaai nintrathuthaan unmai!!

sachin the great....!

inthap pathivin
varikalil..,adarththi athikam!

vaazhththukal...nila!

said...

//"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord Is watching."//

simply superb.......:)

said...

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். கடைசி கொள்ளையடி வாசகம், உள்ளைத்தை கொள்ளையடித்தது. சச்சின் இருக்கும் வரையில் பாண்டிங் முகம் பேயறந்ததைது போல்தான் இருந்தது.

மற்ற வீரர்கள் மட்டும் இந்த ஆயிரத்தில் ஒரு வீரனின் ஆயிரத்தில் ஒரு பங்கு ஆடியிருந்தால் டார்க்கெட் 500 ஆக இருந்தாலும் எட்டியிருக்க முடியும்.

NilavinMagal said...

A very Good Post Nila...
It was like seeing 20 years of Sachin's Cricket in 175 runs.
It's really the best ever knocks of sachin.
India would've lost. But Sachin, the Master blaster had WON. Again.. :)
"Sachin is the best, daylight is second, and then there's the rest."

said...

oru sirantha katturaiyai padiththa thirupthi.neengal kooriya anaiththum unmaithan.cricket=sachin.

said...

oru sirantha katturaiyai padiththa thirupthi.neengal kooriya anaiththum unmaithan.cricket=sachin.

said...

Yes I agree Cricket = Sachin.

said...

silirthuduchu unga pathivum sachin aattamum

said...

உண்மை தான்.


http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html

said...

maveeranku magthana parattu ninaivil vaithu parka vendiya attam

said...

Thanks for the wishes friends.

Anonymous said...

Ok, now Ausies can relax, he is not going to play for atleast another 10 innings until media will keep talking about this 175 runs. Anyway, this is BBCI team with players from India.

-Muthu

said...

சச்சின் - ஒன் மேன் ஆர்மி

இந்த வாசகம் நேற்று தான் முழுமை பெற்றது. என் வாழ்நாளில் நான் மேட்ச் பார்த்து சச்சின் அதிக ரன்கள் அடித்ததே இல்லை. நேற்று தான் ஆசை நிறைவேறியது. நன்றி நண்பரே உங்கள் பதிவிற்கு...

இது சச்சின் பற்றி என் பதிவு: http://anburajabe.blogspot.com/2009/11/blog-post_05.html

said...

மறக்கமுடியாத ஆட்டம். 17000 என்ற இலக்கின் அழுத்தத்தை வைத்து சச்சினை அவுட் செய்ய ஆஸீ வீரர்கள் படாது பாடு பட்டனர்.

பொதுவாக முழு மேட்ச் பற்றி கூறினால் team spirit missing. ஆனால் தோல்வி உறுதி என்று நினைத்து ஆட்டத்தை பார்த்த பொழுது, அங்கு வெற்றிக்கான வழியை காட்டியவர் சச்சின்.

140 ரன் எதிர்பார்த்த இடத்தில், 175 ரன்கள். அங்கு தான் அவரது வெற்றியின் தாகத்தை உணர முடிந்தது. சார்ஜா ஆட்டங்களுக்கு பிறகு, எனது வாழ்நாளின் மிகவும் ரசித்த ஆட்டமாக இதனை கருதுகிறேன்.

50/50 கிரிக்கெட் மீண்டும் சச்சினால் உயிர் பெற்றது.

said...

Super nice composition man...

Our golden days college cricket coming in mind while reading this

பாலா said...

அருமையா எழுதி இருக்கீங்க நண்பா. நானும் சச்சின் ரசிகன். நேத்து சச்சின் ஆட்டம் புல்லரிக்க வைத்தது என்றால், உங்கள் இந்த பதிவு கண்ணீரையே வரவழைத்து விட்டது. ரொம்ப சிலிர்ப்பா இருக்கு. எழுத்தினால் இது போன்று உணர வைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டேன்.

உங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.

said...

நானும் டெண்டுல்கர் ஆட்டத்தால் கவரப்பட்டு கிரிக்கெட்டின் தீவிர ரசிகரானேன்

இந்த பதிவு ஒரு நல்ல கலைஞனுக்கு செய்யும் மரியாதை

அவர் கண்ட கனவு (2010 உலக கோப்பை) நிறைவேற நானும் வாழ்திக்கொள்கிறேன்

said...

மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு தன்னுடைய சதத்தை(100) கொடுத்த வள்ளல் தான் சச்சின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டவர் தான் இந்த சச்சின் 1 ரன் அடிக்க 5 பந்துகலை சாபிடவர் தான் இவை அனைத்திற்கும் சச்சின் சுயநலம் தான் காரணம.

said...

ஆள் இல்லாத ரோட்டில் வண்டி ஓட்டுபவர் சச்சின் என தவறாக நினைத்து இருந்தேன் .. யப்பா வார்த்தைகளே இல்லை... சாதனைகளை விட, வெற்றிக்கான போராட்டமே ஒரு வீரனின் அடையாளம்.. சச்சின் மிக மிக பெரிய போர் வீரர்..

said...

//Blogger balamurgan said...

மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு தன்னுடைய சதத்தை(100) கொடுத்த வள்ளல் தான் சச்சின் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டவர் தான் இந்த சச்சின் 1 ரன் அடிக்க 5 பந்துகலை சாபிடவர் தான் இவை அனைத்திற்கும் சச்சின் சுயநலம் தான் காரணம.//

ஆமா பாலமுருகன் சச்சின் சுயநலவாதிதான்.
அதனால்தான் அவரது அப்பாவின் மறைவின் போதுகூட 12 மணிநேரம்
பயணித்து மறுநாள் போட்டியில் களமிறங்கி சதமடித்தார்.

கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து பதுக்கும் "நல்ல" மனிதர்களிடையே
இன்றுவரை ஒழுங்காக வருமான வரி கட்டுகிறார்.

இதைபோன்று ஆயிரம் காரணம் சொல்ல முடியும்.

மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்காக சதத்தை மட்டும் தந்த வள்ளல் என்பதுமட்டும்தான் உங்களுக்கு தெரியும்.இறந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு சச்சின் உதவியது அறிவீர்களா?

ஒருவன் புகழின் உச்சிக்கு செல்லும்போதெல்லாம் சிலர் தூற்றிக்கொண்டே இருப்பார்கள். இது நொட்டை அது நொள்ளை என்று.நீங்கள் தூற்றிக்கொண்டே இருங்கள்.

அசாரூதீனின் தீவிர ரசிகர் நீங்கள் என்றே நினைக்கிறேன்!!!

said...

இந்த பதிவை இன்று படிக்க நேர்ந்தது என் துரதிர்ஷ்டம்தான்... ஆயிரம் சொன்னாலும் 80% புதிய வீரர்களை வைத்து தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் PROFESSIONALISM பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

said...

i have no words to said and i am not eligible to congrate you "sachin"... regards vijayakumar singapore.

said...

THE GREAT LEGEND AGAIN SHOWS HIS ABILITY IN THE AUS SERIES.SACHIN IS A GODFATHER OF ALL SPORTS

said...

Dear NilaRasigan...

Your post is fantastic, praising The Master's play..!!

Wishes..!!!

said...

நல்ல பதிவு.

சச்சின் டெண்டுல்கர் மேலும் பல சாதனைகளை படைப்பார்

said...

நான் இந்த பதிவை தாமதமாகப் பார்த்தேன் ..கிரிக்கெட் என் மதம் ..சச்சின் என் கடவுள் என்று நினைத்து வாழ்பவன் நான் ..என் நண்பர்கள் பலர் சச்சினை வெறுப்பவர்கள் ..அவர்களும் இந்த பதிவை பார்த்து சச்சின் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்று ஒப்புக்கொண்டனர் ..உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை நிலாமகன் ...சச்சின் ரசிகர்களான எங்களுக்கு உங்கள் பதிவு மிகப்பெரிய விருந்து ..வாழ்க சச்சின் வளர்க அவர் புகழ்...கிரிக்கெட் ல் மட்டுமல்ல பொது வாழ்விலும் சச்சின் ஒரு மிகச்சிறந்த மனிதர்..

said...

நான் இந்த பதிவை தாமதமாகப் பார்த்தேன் ..கிரிக்கெட் என் மதம் ..சச்சின் என் கடவுள் என்று நினைத்து வாழ்பவன் நான் ..என் நண்பர்கள் பலர் சச்சினை வெறுப்பவர்கள் ..அவர்களும் இந்த பதிவை பார்த்து சச்சின் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்று ஒப்புக்கொண்டனர் ..உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை நிலாமகன் ...சச்சின் ரசிகர்களான எங்களுக்கு உங்கள் பதிவு மிகப்பெரிய விருந்து ..வாழ்க சச்சின் வளர்க அவர் புகழ்...கிரிக்கெட் ல் மட்டுமல்ல பொது வாழ்விலும் சச்சின் ஒரு மிகச்சிறந்த மனிதர்..

said...

a wonderful writting

by sachin fan