Friday, November 20, 2009

வேறோர் உலகம்

1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன்
நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.

2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.

-நிலாரசிகன்.

9 comments:

said...

புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன்
நின்றிருந்தாய் நீ.//

கதை முழுவதையும் அழகாகச்சொல்லிவிட்டன இவ்வரிகள்!!

said...

1) //ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்//

2) //பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்//

இந்த இரண்டு வரிகளும் ரொம்பவே யோசிக்க வைத்தன. அர்த்தம் பொதிந்த கவிகள்.

said...

//பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்//

GREAT!

said...

பொம்மைக‌ள் உல‌க‌ம் ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கின்ற‌து. இர‌ண்டாம் க‌விதை மிக‌ பிடித்து இருக்கின்ற‌து

said...

kavithai nice....

yethukku padam vaikkala..nila?

said...

//பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.//

அருமை...... அருமை.....

said...

//ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.//

இது தான் தல மேட்டரே!
மேல ஓவர் புனைவா இருக்கு!

said...

நன்றி நண்பர்களே.

இரசிகை,

என் நண்பனின் வீட்டிலிருந்து இடுகையிட்டதால் படம் சேர்க்க இயலவில்லை.

said...

நல்ல கவிதைகள்