
1.
வனப்பு தொலைந்த
மழைநாளில்தான் நிகழ்ந்தேறியது
நம் மரணம்.
குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்
கதறல்களை நீ
கேட்கவில்லை.
கிளை முறிந்து ஊனமாகும்
மரங்களின் மெளனம் நான்
உணரவில்லை.
ஒரு பறவை
உதிர்த்து சென்ற இறகை
நனைத்துக்கொண்டே இருக்கிறாள்
மழைப்பெண்.
2.
சப்தம் மரணிக்கும் இரவுகளில்
மயானத்தின் நடுவில்
நடனமாட துவங்குகிறாள்
அவள்.
ஈரம் படிந்த
சாம்பல் மீது ஓயாமல்
தொடர்கிறது அவளது
நடனம்.
கலைந்த கூந்தல்
தோகையென காற்றில்
மிதக்கிறது.
கொன்றைகள் இருநிலவுகளாய்
ஒளிர்கிறது.
கண்களில் நீர்வர ஆடிய பின்
வதங்கிய பூவாய்
தரையில் வீழ்ந்து மரிக்கிறாள்.
மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்.
11 comments:
மழைக்கு இதமான வரிகள்.
மழை ரசிகன் என்று போட்டுக்கொள்ளுங்கள்
மழை ரசித்தேன்!
தற்செயலாக வெளியே மழை கொட்டுகிறது--- கவிதை படிக்கும்போது!!
பிடிச்சு இருக்கு நிலா.
//மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்.//
ரொம்ப பிடிச்சிருந்தது.
2-me pidichchirukku...!
மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்
migavum azhaganaa varigal
en kavidhaikaliyum engae anupalama nila??
நல்லா இருக்கு!!!!!
வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே.
ரொம்ப நல்லா இருக்கு நிலாரசிகன்...
ஒவ்வொரு வரியும் ரொம்ப அற்புதமா இருக்கு....
நிசப்த இரவில் மழை பெண்ணின் நடனம்...ஆழ்ந்த சோகம் வரிகளில் தெரிகிறது...
//சப்தம் மரணிக்கும் இரவுகளில்
மயானத்தின் நடுவில்
நடனமாட துவங்குகிறாள்
அவள்.
ஈரம் படிந்த
சாம்பல் மீது ஓயாமல்
தொடர்கிறது அவளது
நடனம்.
கலைந்த கூந்தல்
தோகையென காற்றில்
மிதக்கிறது.
கொன்றைகள் இருநிலவுகளாய்
ஒளிர்கிறது.
கண்களில் நீர்வர ஆடிய பின்
வதங்கிய பூவாய்
தரையில் வீழ்ந்து மரிக்கிறாள்.
மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்.//
ஒவ்வொரு வார்த்தைகளும் நல்லா இருக்கு....
Post a Comment